சீனாவின் புதிய நில எல்லை சட்டத்திற்கு இந்தியா கடும் கண்டனம்.!!

சீனாவின் புதிய நில எல்லை சட்டத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. லாடக் எல்லையில் சீனா அத்துமீறி வருகிறது.

சீனாவின் புதிய நில எல்லை சட்டத்திற்கு இந்தியா கடும் கண்டனம்.!!

சீனாவின் புதிய நில எல்லை சட்டத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. லாடக் எல்லையில் சீனா அத்துமீறி வருகிறது.

இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு சீன நாடாளுமன்றத்தில் எல்லை நில பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

எல்லைப் பகுதிகளில் தேவைப்படும்போது போக்குவரத்து, தொலைத்தொடர்பு, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பிற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என்று அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சட்டத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இருதரப்பு எல்லை பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டு வரும் நிலையில் இச்சடம் இந்தியா-சீனா ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு பலன் இல்லாமல் செய்து விடும் என்று தெரிவித்துள்ளார்.