ஸ்வீடன் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்!!!

ஸ்வீடன் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்!!!
Published on
Updated on
1 min read

ஸ்வீடனில் மிதவாத கட்சி தலைவர் உல்ஃப் கிறிஸ்டெர்சன் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். 

ஸ்வீடன் தேர்தல்:

திங்களன்று, ஸ்வீடனின் பாராளுமன்றம் உல்ஃப் கிறிஸ்டெர்சனை நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுத்ததாக அந்நாட்டின் அலுவலக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்வீடன் நாடாளுமன்றத்தில் 176 உறுப்பினர்கள் உல்ஃப் கிறிஸ்டெர்சனுக்கு ஆதரவாகவும், 173 பேர் எதிராகவும் வாக்களித்ததாகவும் தெரிகிறது.  

மிதவாதக் கட்சி, கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி மற்றும் தாராளவாதிகள் கட்சி ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டணி அரசாங்கத்தை கிறிஸ்டெர்சன் வழிநடத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோடி வாழ்த்து:

உல்ஃப் கிறிஸ்டெர்சன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.  “ இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த பிரதமர் கிறிஸ்டெர்சனுடன் நெருக்கமாக பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன்.  ஸ்வீடனின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட உல்ஃப் கிறிஸ்டெர்சனுக்கு என்னுடைய வாழ்த்துகள்.  எங்களின் பன்முகக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்ற நான் ஆவலாக இருக்கிறேன்.” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

                                                                                                                                      -நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com