ராக்கெட் உற்பத்தி ஆலை மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.....

ராக்கெட் உற்பத்தி ஆலை மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.....

ராக்கெட் உற்பத்தி ஆலையை குறிவைத்து காசாமுனை மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையேயான மோதல் போக்கு தொடர் கதையாய் நீண்டு வருகிறது.  இந்நிலையில் இஸ்ரேல் விமானங்கள், பாலஸ்தீனத்தின் காசாமுனை பகுதியில் உள்ள ராக்கெட் உற்பத்தி ஆலையை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இஸ்ரேல் மீது பாலஸ்தீன போராளிகள் ராக்கெட் வீச்சு நடத்தியதைத் தொடர்ந்து, இந்த தாக்குதலை இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்தி இருக்கின்றன.  

பாலஸ்தீன போராளிகள் வீசிய ராக்கெட்டை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு வழிமறித்து அழித்தது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  உடல் தளர்ந்தாலும் மனம் தளராத தன்னம்பிக்கை... முதல்வரின் வாழ்த்துக்கு ஏங்கும் மாற்றுத்திறனாளி ஓவியர் முத்துச்செல்வன்...