டுவிட்டரில் இடப்படும் பதிவுகள் - உச்ச வரம்பை அதிகரிக்க டுவிட்டர் நிறுவனம் முடிவு!!

டுவிட்டரில் இடப்படும் பதிவுகளின் எழுத்து உச்ச வரம்பை அதிகரிக்க உத்தேசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டுவிட்டரில் இடப்படும் பதிவுகள் - உச்ச வரம்பை அதிகரிக்க டுவிட்டர் நிறுவனம் முடிவு!!

டுவிட்டரில் எழுத்துக்கள் அடங்கிய பதிவுகள், புகைப்படங்கள், வீடியோக்கள், GIF என்று சொல்லக்கூடிய பதிவுகளை இடலாம். இதற்கு வரம்புகள் உள்ளன.

எழுத்துக்கள் மூலம் பதிவிடப்படும் பதிவுகள் 280 எழுத்துக்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். இதேபோல் 4 புகைப்படங்கள், ஒரு GIF அல்லது ஒரு வீடியோ வரை டுவிட்டரில் பதிவிடலாம்.

இந்த நிலையில் எழுத்துக்கள் மூலம் பதிவிடப்படும் பதிவுகளின் எழுத்து உச்ச வரம்பை 280 எழுத்துக்களில் இருந்து 2 ஆயிரத்து 500 எழுத்துக்கள் என அதிகரிக்க டுவிட்டர் நிறுவனம் உத்தேசித்துள்ளது. இதற்கான சோதனை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் டுவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.