அதிபர் பதவியில் இருந்து விலக தயார்...ராஜபக்சே அறிவித்ததாக வெளியான தகவல்..!

அதிபர் பதவியில் இருந்து விலக தயார்...ராஜபக்சே அறிவித்ததாக வெளியான தகவல்..!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி நாடு முழுவதும் பெரும் கலவரம் வெடித்துள்ள நிலையில், அவர் பதவி விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை முழுவதும் முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்:

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என நாடு முழுவதும் போர்க்குரல் எழுந்து வருகிறது. அதன் எதிரொலியாக கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகை முன்பு லட்சக் கணக்கான பொதுமக்கள் திரண்டனர். கட்டுக்கடங்காத போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து முற்றுகையிட்டு வருகின்றனர்.

தப்பி ஓடிய அதிபர்:

இதனால் ஒருபுறம் அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபய ராஜபக்சே தப்பிச் சென்று பத்தரமுல்லையில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும், அவர் கப்பல் மூலம் தப்பிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

அதிபர் பதவி விலக தயார்:

இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் அவரது சொந்தக் கட்சியைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே அடக்க முடியாதபடி போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை, நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி ஆர்ப்பாட்டம் செய்து வரும் நிலையில், இலங்கை அரசியல் நிலவரம் உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.