ஜப்பான் : ஹிரோஷிமா  நாகசாகி நிகழ்வின்  78-வது ஆண்டு நினைவு தினம்...!

ஜப்பான் : ஹிரோஷிமா  நாகசாகி நிகழ்வின் 78-வது ஆண்டு நினைவு தினம்...!

Published on

ஹிரோஷிமா  நாகசாகி அணுகுண்டு தாக்குதலின் 78வது ஆண்டு நிறைவு தினம் ஜப்பானில் அனுசரிக்கப்பட்டது.

அணுகுண்டு தாக்குதலின் 78வது ஆண்டு நிறைவு தினத்தை ஒட்டி ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

இரண்டாம் உலகப் போரின்போது, 1945 ஆம் ஆண்டு ​​ஆகஸ்ட் 6, அன்று ஹிரோஷிமாவில் அமெரிக்கா முதல் அணுகுண்டு தாக்குதலை நடத்திய மூன்று நாட்களுக்குப் பிறகு நாகசாகியில் அணுகுண்டு வீசப்பட்டது .

இந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் 2 லட்சத்து 15 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர்.

மேலும் ஆயிரக்கணக்கானோர் காயங்கள் மற்றும் கதிர்வீச்சு தொடர்பான நோய்களால் இறந்தனர் என்பது  குறிப்பிடதக்கது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com