மூன்றாவது தவணை தடுப்பூசியை செலுத்திகொண்டார் ஜோ பைடன்...

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பைசர் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை செலுத்திக்கொண்டார்.
மூன்றாவது தவணை தடுப்பூசியை செலுத்திகொண்டார் ஜோ பைடன்...
Published on: 
Updated on: 
1 min read

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட முதியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் எனப்படும் 3வது டோஸ் தடுப்பூசி செலுத்த அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சமீபத்தில் அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து பலருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை செலுத்திக்கொண்டார். 78 வயதான ஜோ பைடன் தடுப்பூசியின் முதல் டோசை கடந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதியும், 2-வது டோசை ஜனவரி 11-ம் தேதியும் செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com