அலறும் உலக நாடுகள் மிரட்டும் கிம் ஜாங் உன்… கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை சக்சஸ்...

வடகொரியா புதிதாத உருவாக்கப்பட்ட நீண்ட தூர ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது

அலறும் உலக நாடுகள் மிரட்டும் கிம் ஜாங் உன்… கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை சக்சஸ்...

 கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் வடகொரியா எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், புதிதாக உருவாக்கப்பட்ட புதிய வகை நீண்ட தூர பயண ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் தற்போது வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனைகளை தொடங்கி அதிர வைத்துள்ளது. தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டதாக இந்த ஏவுகணை உள்ளது. 1,500 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியா சோதனை செய்த இந்த ஏவுகணை அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் வல்லமை கொண்டதா? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. கடந்த சில மாதங்களாக ஏவுகணை சோதனையில் ஈடுபடாத வடகொரியா தற்போது மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.வட கொரியாவின் ஏவுகணை சோதனையானது அண்டை நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தல் என அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் எச்சரிக்கை விடுத்துள்ளது.