முககவசம் அணிய வேண்டிய கட்டாயமில்லை... பிரிட்டன் பிரதமர் அதிரடி உத்தரவு

பிரிட்டன் மக்கள் அனைவரும் வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

முககவசம் அணிய வேண்டிய கட்டாயமில்லை... பிரிட்டன் பிரதமர் அதிரடி உத்தரவு

இங்கிலாந்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போடப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள், படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் வரும் 19-ஆம் தேதி முதல் முழுமையாக தளர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.  

கடந்த மாதம் 21-ஆம் தேதியே கட்டுபாடுகளை தளர்த்த பிரதமர் போரிஸ் ஜான்சன்  முடிவு செய்திருந்த நிலையில் டெல்டா வகை மாறுப்பாட்டின் அச்சம் காரணமாக இத்தாம் 19-ஆம் தேதிக்கு மாற்றப்படுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், மக்கள் அனைவரும் வைரசுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே பிரிட்டனில் ஜூலை 19-ஆம் தேதிக்குப் பிறகு முககவசம் அணிய வேண்டிய கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.