இங்கிலாந்தின் பிரதமாகிறார் லிஸ்!!!

இங்கிலாந்தின் பிரதமாகிறார் லிஸ்!!!
Published on
Updated on
2 min read

இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் நடைபெற்று வந்தது.  அவரது அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் இருந்த கிறிஸ் பின்ஷர் மீது பாலியல் ரீதியாக அநாகரிகமாக நடந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.  கிறிஸ் மீது சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றசாட்டு எழுந்தது.

அமைச்சர்கள் பதவி விலகல்:

இதனைத் தொடர்ந்து ஜான்சனின் அமைச்சரவையின் அமைச்சர்கள் தொடர்ச்சியாகா பதவி விலகினர்.  இந்நிலையில் போரிஸ் ஜான்சனும் பதவி விலக வலியுறுத்தப்பட்டார்.  பதவி விலகிய அமைச்சர்களுள் ரிஷி சுனக்கும் ஒருவராவார்.

பதவி விலகிய ஜான்சன்:

தொடர்ந்து எழுந்த விமர்சனங்களாலும் கண்டனங்களாலும் ஜான்சன் அவரது பதவியை ராஜினாமா செய்தார்.  அதனால் இங்கிலாந்தில் பிரதமருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

யார் அடுத்த பிரதமர்:

பிரதமர் தேர்தல் பலகட்டமாக நடைபெற்றது.  இறுதி கட்ட வேட்பாளர்களாக ரிஷி சுனக்கும் லிஸ் ட்ரஸ்ஸும் தற்போது களத்தில் இருந்தனர்.  இருவருக்குமிடையே கடுமையான போட்டி நிலவி வந்தது.

கருத்து கணிப்பும் கேள்வியும்:

கருத்து கணிப்பில் ரிஷிக்கன வெற்றி வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  செய்தி ஊடகம் ஒன்றில் “நீங்கள் லிஸ் ட்ரஸ் அமைச்சரவையில் பணியாற்றுவீர்களா?” என்ற கேள்விக்கு ரிஷி சுனக் அதிர்ச்சியூட்டும் விதமாக பதிலளித்திருந்தார்.

லிஸ் ட்ரஸ் அமைச்சரவையில் நிச்சயமாக பணியாற்ற மாட்டேன் எனவும் முந்தைய பிரதமரை போன்றவரே லிஸ் எனவும் பதிலளித்தார் ரிஷி.  மேலும் லிஸ் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை எனவும் அவரது அமைச்சரவை தோற்று போகும் எனவும் தெரிவித்திருந்தார்.  மீண்டும் கசப்பான அனுபவம் பெற தனக்கு விருப்பம் இல்லை எனவும் பேசியிருந்தார்.  அவருக்கான வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ளது என்பது தெரியும் எனவும் ரிஷி கூறியிருந்தார்.

பலத்தை நிரூபித்த லிஸ்:

கடந்த சில மாதங்களாக பல கட்டங்களாக நடைபெற்ற எம்.பிக்கள் மத்தியிலான வாக்கெடுப்பில் ரிஷியே தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார்.  இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை பழமைவாத கட்சியின் உறுப்பினர்கள் அடுத்த பிரதமரை தேர்வு செய்ய வாக்களித்தனர்.  இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் படி ரிஷி சுனக்கை பின்னுக்கு தள்ளி லிஸ் ட்ரஸ் இங்கிலாந்தின் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com