குறைந்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம்..... காரணம் என்ன?!!!

குறைந்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம்..... காரணம் என்ன?!!!

2022-ம் ஆண்டில் சீனாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 3 சதவீதமாக சரிந்துள்ளது. 

சீனாவின் பொருளாதார மந்தநிலை உலகம் முழுவதும் சிற்றலையை உருவாக்கக் கூடும் என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.  அந்நாட்டின் வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2022-ம் ஆண்டில் 3 சதவீதமாக சரிந்துள்ளது.  5.5 சதவீத இலக்கை விட குறைவாக பதிவாகி உள்ளது. 
கொரோனா பரவல் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், 2022-ம் ஆண்டு அக்டோபரில் பன்னாட்டு நிதியம் வெளியிட்ட கணிப்புகளை விட சீனாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சற்று குறைவாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    தொடர் மழையார் தண்ணீரில் மூழ்கிய நகரம்.....