
கனடா நாட்டின் ஓன்டோரியோ நகரில் விஷ்ணு மந்திர என்னும் இடத்தில உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இந்திய தூதரகம் தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டொரோண்டோ நகரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டிர் செய்தியில், மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டது முகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், காழ்புணர்ச்சியால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வெறுக்கத்தக்க குற்றச்செயல், கனடாவில் வாழும் இந்திய மக்களின் மனதை புண்படுத்தியிருப்பதாகவும் கூறியுள்ளது.
மேலும், இது தொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.