கொரோனாவால் அதிக பாதிப்பு ஏற்படுத்திய மலேரியா!!!

கொரோனாவால் அதிக பாதிப்பு ஏற்படுத்திய மலேரியா!!!

நோயாளிகளின் எண்ணிக்கை 2020 இல் அதிகரித்தன.  அதே நிலை 2021 இல் மெதுவான வேகத்தில் தொடர்ந்துள்ளது.

WHO அறிக்கையின்படி, கொரோனா தொற்றுநோய் மலேரியாவைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை நிறுத்தியது.  இதன் விளைவாக இரண்டு ஆண்டுகளில் உலகளவில் கூடுதலாக 63,000 இறப்புகள் ஏற்பட்டுள்ளது.  அதே நேரத்தில், உலகம் முழுவதும் 13 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கை 2020 இல் அதிகரித்தது எனவும் அதே நிலை 2021இல் மெதுவான வேகத்திலும் தொடர்ந்தது எனவும் கூறியுள்ளது.  

கடந்த ஆண்டு 247 மில்லியன் உலகளாவிய மலேரியா நோய்த்தொற்றுகள் மற்றும் 619,000 இறப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் WHO தெரிவித்துள்ளது.  சுமார் 95% தொற்று ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவை எனவும் நாம் கொரோனா தொற்றுநோயை நீக்க முயற்சித்ததில் மலேரியாவை கட்டுபடுத்த தவறி விட்டோம் என்று மூத்த அதிகாரி அப்டிஸ்லான் நூர் கூறியுள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  நிரூபிக்க தவறிய காங்கிரஸ்...ஒன்றிணையுமா எதிர்க்கட்சிகள்...மக்களவை தேர்தல்2024??!!