பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்தவருக்கு 4 மாதம் சிறை!

பொதுவெளியில் பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் கன்னத்தில் நபர் ஒருவர் அறைந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்தவருக்கு 4 மாதம் சிறை!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தென்கிழக்கு பிரான்சில் உள்ள டிரோம் என்ற பகுதிக்கு  கொரோனா தொற்றுக்கு பிறகு மக்களின் வாழ்க்கை எவ்வாறு உள்ளது என்பது குறித்து பார்வையிட சென்றிருந்தார்.

அப்போது எல்லோரும் அதிபரை பார்த்ததும் உற்சாகமாக குரல் கொடுக்க.  கூட்டத்தில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் அதிபரை கன்னத்தில் ஓங்கி அறைந்துமேக்ரான் ஒழிக ' என பிரெஞ்சு மொழியில் முழக்கம் எழுப்பினார்.

 இந்த சம்பவம்  கூட்டத்தில் இருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பாதுகாப்பு படையினர் இளைஞரை உடனடியாக கைது செய்தனர்.  
பின்னர் விசாரனை நடத்திய போது, அவர்  பெயர் டேமியன் என்றும், தன்னை அனைவரும் கவனிக்க வேண்டும் என்பதற்காக மக்ரோனை அறைந்ததாகவும் ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதிபரைக் கன்னத்தில் அறைந்த குற்றத்திற்காக 18 மாதம் சிறைத் தண்டனை விதித்து பிரான்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றத்தை ஒப்புக் கொண்டதை தொடர்ந்து தண்டனைக் காலம் 4 மாதமாகக் குறைத்து உத்தரவிடப்பட்டது.