ஜாமீன் கோரும் மெகுல் சோக்சி... டொமினிகா நீதிமன்றத்தில் மனு..
ஜாமீன் கோரி மெகுல் சோக்சி டொமினிகா நீதிமன்றத்தில் மனு

ஐ.நா. பொது சபையில் காஷ்மீர் விவகாரங்களை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கடுமையான கண்டனங்களை தெரிவித்து உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபையின் 78-வது கூட்டத்தொடரின் போது பேசிய பாகிஸ்தானின் பொறுப்பு பிரதமர் அன்வாரூல் ஹக் காக்கர், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையே அமைதி ஏற்பட காஷ்மீர் விவகாரம் முக்கியம் எனத் தெரிவிதுள்ளார்.
காஷ்மீர் விவகாரங்களை பற்றி ஐ.நா. பொது சபையில் எழுப்பியதற்காக, ஐ.நா. பொது சபையின் இரண்டாவது குழுவுக்கான இந்தியாவின் முதன்மை செயலாளர் பெடல் கெலாட் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், இந்தியாவின் ஆக்கிரமிப்பு பகுதிகளை பாகிஸ்தான் காலி செய்து வெளியேற வேண்டும் என்றும் எல்லை கடந்த பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பயங்கரவாதத்திற்கான கட்டமைப்புகளை அந்நாடு உடனடியாக மூட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க || "நாட்டுக் கோழியைப் பெருக்க நடவடிக்கை" அனிதா ராதாகிருஷ்ணன்!!
காலிஸ்தான் தீவிரவாதி விவகாரம் தொடர்பாக கனடா, இந்தியா நட்புறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
தீவிரவாதி ஹர்தீப்சிங் நிஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவின் பேரில் இந்தியத் தூதர் வெளியேற்றப்பட்டார்.
இதன் எதிரொலியாக கனடா தூதரை 5 நாட்களில் இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் கனடாவில் இந்திய விரோத நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால் கனடாவுக்கு பயணம் செய்வதை இந்தியர்கள் தவிர்ப்பதோடு அந்நாட்டுவாழ் இந்திய மாணவர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தூதர்கள் வெளியேற்ற விவகாரம் எதிரொலியாக கனடா பாடகர் சுப்னீத் சிங்கின் இந்திய மேடைநிகழ்ச்சி ரத்து செய்யப்படுள்ளது. இந்நிலையில் பஞ்சாப், ஜம்முகாஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இசைநிகழ்ச்சி நடத்தவிருந்த சுப்னீத் சிங்கின் இந்தியப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Singer Shubhneet Singh’s Still Rollin Tour for India stands cancelled. To that end, BookMyShow has initiated a complete refund of the ticket amount for all consumers who had purchased tickets for the show. The refund will be reflected within 7-10 working days in the customer's…
— BookMyShow (@bookmyshow) September 20, 2023
இதனால், இதற்கான டிக்கெட் தொகையை 10 நாட்களுக்குள் திருப்பி அளிப்பதாக Book my show "எக்ஸ்" தளத்தில் பதிவிட்டுள்ளது.
வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்ததால் ராமேஸ்வரம் மீனவர்கள் உயிர் பயத்துடன் கரை திரும்பினர்.
கடந்த 13-ந் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து சென்ற மீனனவர்கள் 17 பேரை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை கைது செய்ததுடன், அவர்களின் 3 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தது. இதனை கண்டித்து, கடந்த 15-ந் தேதி முதல் 17ஆம் தேதி வரை மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், அனுமதி சீட்டு கிடைத்தை தொடர்ந்து ராமேஸ்வரத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
இந்நிலையில், தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர்.
இதனால், 3 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள், உயிர் பிழைத்தால் போதும் என வெறுங்கையுடன் கரை திரும்பி உள்ளனர். இலங்கை கடற்படையின் தொடரும் அட்டூழியத்தால் மீனவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
இதையும் படிக்க || 'எனக்கும் பூ வைத்து விடு'... கோமதி யானையின் குறும்பு!!
திருகோணமலை நோக்கி பயணித்த திலீபனின் நினைவு ஊர்தி திருகோணமலை சர்தாபுர பகுதியில் வைத்து சிலரால் தாக்கப்பட்தோடு பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும் தாக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது.
1987 ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்து வெளியேற வலியுறுத்தி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த திலிபன் உண்ணாவிரம் மேற்கொண்டார். இந்த போராட்டத்தில் திலிபன் 1987 செப்டம்பர் 26 ஆம் நாள் உயிரிழந்தார்.
ஒவ்வொரு ஆண்டும் இவரது நினைவு அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டும் 15ம் நாள் பொத்துவில் பகுதியில் இருந்து நல்லூர் நோக்கிய தனது பயணத்தை தொடர்ந்த திலீபனின் நினைவு ஊர்தியானது நேற்றைய தினம் மூதூர் - கட்டைபறிச்சான் பகுதியில் இருந்து ஆரம்பித்து ஆலங்கேணி, தம்பலகாமம் ஊடாக திருகோணமலை நோக்கி ஏ6 பிரதான வீதியூடாக பயணித்தபோது சர்தாபுர பகுதியில் வீதியில் கற்களைப் போட்டு வழிமறித்து குறித்த வாகனம் சில சிங்களவர்களினால் தாக்கப்பட்டுள்ளது. இதன்போது வாகனத்தில் அமர்ந்திருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரனும் வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.
இதன்பின்னர் திலீபனின் நினைவு ஊர்தியானது திருகோணமலை நகருக்குள் உள்நுழையவிடாது திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் இரண்டு பொலிஸ் ஜீப் உட்பட பஸ் ஒன்றுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
இதையும் படிக்க: ''தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை'' - சசிகலா
தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 17 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையடுத்து மீனவர்கள் கைது நடவடிக்கை விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை நெடுந்தீவு அருகே தென்கிழக்கு கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் சென்ற விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையும் படிக்க || மணல் குவாரிகள் முறைகேடு, ED சோதனை நிறைவு... கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள்!!