29 வருடம் சிறைதண்டனை அனுபவித்த இந்தியர்...மறுபிறவி என உருக்கம்...

பாகிஸ்தானில் உளவு பார்த்த குற்றத்திற்காக 29 ஆண்டுகள் சிறைவாசம் சென்று விடுதலையான  குல்தீப் சிங் என்பவர் இரண்டாவது முறையாக பிறந்தது போன்று உணர்கிறேன் என கூறியுள்ளார்
29 வருடம் சிறைதண்டனை அனுபவித்த இந்தியர்...மறுபிறவி என உருக்கம்...
Published on
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் மக்வால் என்ற கிராம பகுதியை சேர்ந்தவரான குல்தீப்சிங்.இவர் பாகிஸ்தானில் உள்ள எல்லை பகுதியில் வேலை பார்த்து வந்ததாகவும் கடந்த 1992 ஆம் ஆண்டு இவரை உளவு பார்த்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே அவரது குடும்பத்தினர் குல்தீன் சிங்கிற்கு என்ன நேர்ந்தது என்பது தெரியாமல் தவித்து வந்த நிலையில் இருந்துள்ளனர். கைது செய்து சிறையில் இருந்த அவர் மூன்று ஆண்டுகளிக்கு பின்னதாக தான் சிறையில் இருப்பதாகவும் தனக்கு 25 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்ட தகவல்களையும் கடிதம் ஒன்றிம் மூலம் தவித்து வரும் தனது குடும்பத்தாரருக்கு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இந்த கடித்ததிற்கு பிறகு சிறையில் என்ன நடப்பது என்பதை தெரியாமல் மேலும் அவரது குடும்பத்திடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.அதன் பின்னர் அவரிடம் இருந்து எவ்வித கடிதமும் வரவில்லை என குடும்பத்தாரர் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து அவரை கொலை செய்திருப்பார்களோ என்றெல்லாம் கேள்விகள் குடும்பத்தின் மத்தியில் தோன்ற ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.

29 ஆண்டுகள் சிறைவாசம் சென்ற நிலையில் தனது 53 வயதில் குல்தீப் சிங் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.சொந்த ஊருக்கு திரும்பிய அவரை பட்டாசுகள் வெடித்தும்  மலர்கள் தூவியும் கரன்சி நோட்டுகளை அவர் மீது அள்ளி திணித்தும் உற்சாக வரவேற்ப்பு அழித்துள்ளனர்.இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் அந்நாட்டில் வேலை பார்க்கும் அனைவரையும் தவறான கருத்தின் அடிப்படையில் உளவாளிகள் என நினைத்து விடுவதாக கூறிய அவர் என்னையும் அதே போலவே நினைத்து கைது செய்ததாக கூறினார்.தான் விடுதலையானது குறித்து அவர் 29 ஆண்டுகள் சிறையில் இருந்து அன்றாட வாழ்க்கைக்கு திரும்பி இருப்பது 2 வது முறையாக பிறந்தது போல உணர்வதாகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com