தாலிபான் அரசின் தலைவராக முகமது ஹசன் தேர்வு

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தலைமையில் அமைய உள்ள புதிய அரசுக்கு முகமது ஹசன் தலைமையேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாலிபான் அரசின் தலைவராக முகமது ஹசன் தேர்வு

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தலைமையில் அமைய உள்ள புதிய அரசுக்கு முகமது ஹசன் தலைமையேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கன் ராணுவ படைக்கு உதவி வந்த அமெரிக்க படை முற்றிலுமாக வெளியேறியுள்ளது. இதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். ஆப்கன் முழுமையாக தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து கிட்டதட்ட ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் அங்கு புதிய அரசை அமைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. 

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தலைமையில் அமைய உள்ள புதிய அரசின் தலைவராக முகமது ஹசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தாலிபான் அரசின் துணை தலைவராக அப்துல் கனி பரதர் செயல்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது துணைத் தலைவராக மவ்லவி ஹன்னாஃபி செயல்படுவார் என்றும், உள்துறை அமைச்சராக சிராஜுதீன் ஹக்கானி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு அமைச்சராக முல்லா யாகூப் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே ஆப்கானிஸ்தானில் அமைந்திருக்கும் புதிய அரசாங்கத்தில் ஷரியா சட்டம் நிலைநாட்டப்படும் எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com