உக்ரைனில் இதுவரை 3,500க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்திருப்பதாக ஐ.நா. தகவல்!!

உக்ரைனில் இதுவரை 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் ரஷ்ய தாக்குதலுக்கு உயிரிழந்திருப்பதாக ஐ.நா.தகவல் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் இதுவரை 3,500க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்திருப்பதாக  ஐ.நா. தகவல்!!

இதுகுறித்து ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உக்ரைன் மீது ரஷிய படைகள் தாக்குதலை தொடங்கியது முதல் இதுவரை அந்நாட்டில் 3 ஆயிரத்து 573 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 3 ஆயிரத்து 816 பொதுமக்கள் காயம் அடைந்ததாகவும் ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

மேலும் கனரக பீரங்கிகள், வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் மூலம் பெரும்பாலான பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாகவும் ஐ.நா.சபை குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, உக்ரைனை ஆக்ரமிக்கும் முயற்சியில் ரஷியாவின் தோல்வி வெளிப்படையானது என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். எனினும் வான்வெளித் தாக்குதல் மற்றும் பீரங்கி தாக்குதல் மூலம் உண்மையை மறைக்க ரஷிய படைகள் முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நேட்டோ அமைப்பில் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் இணைவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  ஸ்வீடன் பிரதமர் மாக்டலேனா ஆண்டர்சன் மற்றும் பின்லாந்து அதிபர் சவுலி நினிஸ்டோ ஆகியோருடன் ஜோ பைடன் தொலைபேசி மூலம் பேசினார்.

உக்ரைன் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரேனிய மக்களுக்கு ஆதரவு அளிக்கும் உறுதிப்பாடு குறித்து இரு தலைவர்களுடன் பைடன் விவாதித்ததாக வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.