நேட்டோ என்பது உண்மையில் ஒரு போர் அமைப்பு .. வரலாறு நிரூபித்துள்ளது- துருக்கி தொழிலாளர் கட்சி

நேட்டோ என்பது உண்மையில் ஒரு போர் அமைப்பு என்பதை வரலாறு நிரூபித்துள்ளதாக துருக்கி தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவர் சுக்ரன் டோகன் குறிப்பிட்டுள்ளார்.

நேட்டோ என்பது உண்மையில் ஒரு போர் அமைப்பு .. வரலாறு நிரூபித்துள்ளது- துருக்கி தொழிலாளர் கட்சி

நேட்டோ தன்னை ஒரு ராணுவ பாதுகாப்பு அமைப்பாக வர்ணித்துக் கொண்டாலும் அது பொதுமக்களின் துன்பங்களைப் பொருட்படுத்தாமல் உலகெங்கிலும் நடைபெற்ற அனைத்து பெரிய மோதல்களிலும் பங்கேற்றுள்ளது என்றும் அவர் கூறினார்.

ரஷ்யா- உக்ரைன் போருக்கு இடையில் உக்ரைனுக்கு தொடர்ந்து நேட்டோ ஆயுதங்கள் வழங்குவதில் இருந்தே இது தெரியும் என்றும் அவர் கூறினார். ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியா போன்ற நாடுகளில் தனது சுயநலத்திற்காக அமெரிக்கா தொடங்கிய போர்களில் ஏராளமான பொது மக்கள் அகதிகளானதுடன் பலர் உயிரிழந்தனர்.

அது குறித்து அமெரிக்கா சிறிதும் கவலைப்படவில்லை என்று கூறிய டோகன், ரஷ்யாவைக் குழிதோண்டிப் புதைப்பதே அமெரிக்காவின் நோக்கம் என்றார்.