
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அரசியல் நிலைமையும் மோசமாகிக் கொண்டே வருகிறது.
மக்கள் கடுமையான போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்சே தலைமையிலான அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவியை நேற்று ராஜினாமா செய்தனர். இந்நிலையல் அந்நாட்டு அதிபர் கோட்டபய ராஜபக்சே புதிய அமைச்சரவை அமைக்க முன்வருமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.
இதனையடுத்து, இன்று புதிய அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டது. வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக ஜோன்ஸ்டன்பெர்ணாண்டோ,
நிதி அமைச்சராக அலி சப்ரி, கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.