ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக புதிய தடுப்பூசி... 100 நாட்களில் அறிவிக்கிறது பைசர்...

ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக 100 நாட்களில் புதிய தடுப்பூசியை அறிவிப்பதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக புதிய தடுப்பூசி... 100 நாட்களில் அறிவிக்கிறது பைசர்...

ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக 100 நாட்களில் புதிய கொரோனா தடுப்பூசியை தயாரிப்போம் என, அமெரிக்காவின் பைசர் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வீரியமிக்க ஒமிக்ரான் ரக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு எதிராக தடுப்பூசியின் செயல் திறன் குறைவு என கூறப்படுகிறது.

தற்போதுள்ள தடுப்பூசிகள் புதியவகை ஒமிக்ரான் ரக கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்குமா? என்பது குறித்து, அந்தந்த தடுப்பூசி நிறுவனங்கள் தீவிர ஆராய்ச்சியில் இறங்கியுள்ளன.

இந்நிலையில், தற்போதுள்ள தங்கள் தடுப்பூசியில் இருந்து ஒமிக்ரான் வைரஸ் தப்பிக்குமா? என தெரியவில்லை என பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக 100 நாட்களில் புதிய கொரோனா தடுப்பூசியை தயாரித்து அனுப்புவோம் என குறிப்பிட்டுள்ளது.