இனி விசா பெறுவது ஈஸி...வாங்க எப்படினு தெரிஞ்சுக்கலாம்...!!!

இனி விசா பெறுவது ஈஸி...வாங்க எப்படினு தெரிஞ்சுக்கலாம்...!!!

இந்தியாவுக்கான தாய்லாந்து தூதர் பட்டரத் ஹாங்டாங் இந்தியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். பாங்காக் விமான நிலையத்தில் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்க்க, எளிதாக விசாவை பெறுவது எவ்வாறு என கூறியுள்ளார்.

தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள்:

கொரோனா தொற்றுநோய் காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தாய்லாந்து  சுற்றுலாவுக்காக தளர்த்தியுள்ளது.  இதனால் பாங்காக் விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  இதனால் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. 

இந்தியாவிற்கான தூதர்:

இதனைத் தொடர்ந்து விசாவை பெறுவதற்கான எளிய வழியை இந்தியாவுக்கான தாய்லாந்து தூதர் பட்டரத் ஹாங்டாங் இந்தியர்களுக்கு வழங்கியுள்ளார். பாங்காக் விமான நிலையத்தில் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்க்க, தூதரகத்தில் இருந்து தாய்லாந்து விசாவைப் பெற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். 

அனைத்து விமான நிலையத்திற்கும்:

மேலும் பட்டரத் கூறுகையில் தாய்லாந்தில் மட்டுமல்ல, எந்த விமான நிலையத்திற்கும் இது பொருந்தும் என்று அவர் கூறியுள்ளார்.  மேலும், ​​தாய்லாந்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்தித் தருவதுடன், விமான நிலையத்தில் முறையான ஏற்பாடுகளைச் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

-நப்பசலையார்

இதையும் படிக்க:  அம்பேத்காரின் தியாகமும்...ராகுலின் சிவப்பு கம்பளமும்...