அக்டோபர் - 15 ...இன்று... " உலக கை கழுவுதல் தினம் "

அக்டோபர் - 15 ...இன்று... " உலக கை கழுவுதல் தினம் "

கை கழுவுதலின் அவசியத்தை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கில் உலக கை கழுவுதல் தினம் இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் 36 சதவீத மக்கள் மட்டுமே முறையாக கைகளை கழுவும் பழக்கம் உள்ளவர்கள் என்பது மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது

தினமும் பல்வேறு இடங்களுக்கு செல்லும் மக்கள், உணவருந்தும் நேரம் மட்டுமின்றி அவ்வப்போது கைகளை சுத்தமாக்க சோப்புப்போட்டு  கழுவ வேண்டியது அவசியம். மேலும், கைகளை முறையாக சோப்புபோட்டு கழுவுதல் மூலம், நம்மையும் நம் சமூகத்தையும் எந்த வித நோயும் தொற்றாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும் என மருத்துவர் ஸ்பூர்த்தி கூறியுள்ளார். மேலும், கை கழுவும் பழக்கத்தின் மூலம் 30% முதல் 48% வரை வயிற்றுப் போக்கு ஏற்படாமலும் , 20% நிமோனியா உள்ளிட்ட சுவாச பிரச்சனைகள் ஏற்படாமலும், மேலும், காலரா, எபோலா, ஷிகெல்லோசிஸ், வயிற்றுப்போக்கு, கண்ணில் ஏற்படும் தொற்று போன்றவற்றை தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

அதோடு, அடிக்கடி கை கழுவும் பழக்கம் கொண்டிருப்பவர்கள் 95% தொற்றுநோய்களில் இருந்து தப்பிவிட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கொரோனா வைரசுக்கு பிந்தைய உலகில் சோப்புடன் கை கழுவுவது தான் பல ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளது. மேலும் ஆரோக்கியமான வாழ்வியல் முறைக்கு கைகளை தூய்மையாக வைத்திருப்பது முதன்மையான ஒன்று என கூறுகிறது மருத்துவ உலகம்.