பாக். அமெரிக்க ராணுவ தளம் நிலைநிறுத்த அனுமதி மறுப்பால் தனது ஆட்சி கவிழ்ப்பு - இம்ரான் கான்

பாக். அமெரிக்க ராணுவ தளம் நிலைநிறுத்த அனுமதி மறுப்பால் தனது ஆட்சி கவிழ்ப்பு - இம்ரான் கான்

பாகிஸ்தானில் அமெரிக்க ராணுவ படைகளை நிலைநிறுத்த அனுமதிக்காத காரணத்தினாலேயே சூழ்ச்சி முறையில் தனது ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான்கான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அண்மையில் புலம்பெயர்ந்த பாகிஸ்தானியர்களுடன்  வீடியோ வாயிலாக உரையாற்றிய  அவர், ஆப்கானிஸ்தானி லிருந்து படைகளை விலக்கிக்கொண்ட அமெரிக்கா பயங்கரவாத செயலை கண்காணிக்க தனது ராணுவப்படையை பாகிஸ்தானில் நிலைநிறுத்த அமெரிக்கா திட்டமிட்டதாகவும், இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறினார்.

ஆனால் ஏற்கனவே அமெரிக்க ராணுவத்தால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தானி யர் கள் கொல்லப்பட்டதால், மேலும் பல உயிர் பலிகளை விரும்பாததாலேயே அதற்கு தடை விதித்ததாகவும் குறிப்பிட்டார்.

தற்போதும் ராணுவ தளம் அமைப்பது குறித்து அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய அவர், தனது ஆட்சி கவிழ்க்கப்பட இதுவும் ஒரு காரணம் என தெரிவித்தார்.