பாகிஸ்தானின் அமான் 2023... 

பாகிஸ்தானின் அமான் 2023... 

பாகிஸ்தானின் கராச்சிக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் அமான் 2023 என்ற தேசிய கடல்சார் பயிற்சியை பாகிஸ்தான் கடற்படை தொடங்கியுள்ளது. 

பாகிஸ்தான் கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ள அமான் 23 பன்னாட்டு பயிற்சி கராச்சியில் கடந்த 10ஆம் தேதி தொடங்கிய நிலையில், நாளை வரை நடைபெறவுள்ளது.  பயங்கரவாதம், கடற்கொள்ளையர் அச்சுறுத்தல், போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் தொடர்பான கடல்சார் பரப்பில் இடம்பெறும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதில், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பங்கேற்றுள்ளன.

அமான் 2023 பயிற்சியானது துறைமுகம் மற்றும் கடல் என இரண்டு கட்டங்களாக நடைபெறும்.   இதில் சுமார் 50 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு கடற்படைக் கப்பல்கள், சிறப்பு படைகள் மற்றும் விமானங்கள் பங்கேற்றுள்ளன.

2007 இல் தொடங்கப்பட்ட அமான் தொடர் பயிற்சிகளின் கீழ் நடத்தப்படும் எட்டாவது நிகழ்வாக அமன் 23 அமையும்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  ஈரோட்டில் தஞ்சம் அடைந்த திமுக அமைச்சர்கள்.... தேர்தல் பயமா?!!