செவ்வாயில் பாறை படிமங்களை சேகரிக்கும் பெர்செவெரன்ஸ் ரோவர்...

செவ்வாயில் பாறை படிமங்களை சேகரிக்கும் பெர்செவெரன்ஸ் ரோவர்

செவ்வாயில் பாறை படிமங்களை சேகரிக்கும் பெர்செவெரன்ஸ் ரோவர்...
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய நாசா அனுப்பியுள்ள பெர்செவெரன்ஸ் ரோவர், அங்கிருந்து பாறைகளின் படிமங்களை சேகரிக்க உள்ளது.
 
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர்வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய விண்வெளி ஆய்வு மையமான நாசா, பெர்செவெரன்ஸ் ரோவரை அனுப்பி வைத்திருந்தது. இந்த ரோவர் கடந்த பிப்ரவரி 18ம் தேதி, செவ்வாய் கிரகத்தை அடைந்து, அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தெற்கு பகுதிக்கு சென்று,  நிலப்பரப்பை படம்பிடித்து அனுப்பியுள்ளது.
 
மேலும் அங்கு பல ஆண்டுகளுக்கு முன் குளம் இருந்ததாகவும், அவை தற்போது வறண்டு வெடிப்புற்ற பாறைகளாக சிதறிக்கிடப்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த பாறைகளின் படிமங்களை ரோவர் மூலம் சேகரிக்க திட்டமிட்டுள்ள விஞ்ஞானிகள், அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இரு வாரங்களுக்குள் அந்த முயற்சி வெற்றிப்பெறும் என தெரிவித்துள்ளனர்.