நன்றி தெரிவித்த உக்ரைன் அதிபர்...!!!

நன்றி தெரிவித்த உக்ரைன் அதிபர்...!!!
Published on
Updated on
1 min read

நேட்டோவில் சேர ஆர்வம் காட்டியதால் உக்ரைன் மீது படையெடுத்த ரஷ்யா, 7 மாதங்களுக்கும் மேலாக தரை வழியாகவும், வான் வழியாகவும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் பல ஆயிரக்கணக்கான உக்ரைனியர்கள் சித்ரவதை செய்து கொல்லப்பட்டதாகவும், அந்நாட்டின் பெரும்பாலான நகரங்கள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. 

ஆதரவு கரம் நீட்டும் நாடுகள்:

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர் தாக்குதலை தொடர்ந்து உலக நாடுகள் தொடர்ந்து ஆதரவு காட்டி வருகின்றன.  அதனொடு நில்லாமல் ரஷ்யாவிடமும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

பிரதமராக பதவியெற்ற பின் உக்ரைன் சென்ற ரிஷி சுனக் தனது முழு ஆதரவையும் தெரிவித்ததோடு உக்ரைனின் சுதந்திர போராட்டத்தில் பிரிட்டன் எப்போதும் துணை நிற்கும் என தெரிவித்தார்.

நன்றி தெரிவித்த செலன்ஸ்கி:

அதனைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, சுனக்கை சந்தித்த வீடியோவை இணைய ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.  ஜெலென்ஸ்கி பிரிட்டனின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவித்ததோடு உங்களைப் போன்ற நண்பர்களின் உதவியுடன் உக்ரைன் போரில் வெற்றி பெறுவது உறுதி  எனவும்  நாங்கள் எங்கள் சுதந்திரத்தை பாதுகாக்க முடியும் என்று கூறியுள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com