செப். 24ம் தேதி அமெரிக்காவில் நடைபெறும் குவாட் மாநாடு...

இந்தியா உள்ளிட்ட நான்கு நாடுகள் இணைந்து உருவாக்கிய குவாட் அமைப்பின் முதல் சந்திப்பு அமெரிக்காவில் வரும் செப்டம்பர் 24-ம் தேதி நடைபெற உள்ளது. 

செப். 24ம் தேதி அமெரிக்காவில் நடைபெறும் குவாட் மாநாடு...

இந்தியா உள்ளிட்ட நான்கு நாடுகள் இணைந்து உருவாக்கிய குவாட் அமைப்பின் முதல் சந்திப்பு அமெரிக்காவில் வரும் செப்டம்பர் 24ம் தேதி நடைபெற உள்ளது. 

தென்சீனக் கடல் பகுதியில் சீன ஆதிக்கத்துக்கு எதிராகவும், பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படவும் இந்தியா, அமெரிக்கா,ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் இணைந்து குவாட் என்ற அமைப்பை உருவாக்கின. இந்த அமைப்பின் முதல் மாநாடு அமெரிக்காவில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தலைமையில் வரும் செப்டம்பர் 24ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கல்ந்து கொள்ள உள்ளதற்காக பிரதமர் மோடி, ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிசன் மற்றும் ஜப்பான் பிரதமர் யோசிகேடு சுகா ஆகியோர் அமெரிக்கா  செல்ல உள்ளனர்.

இதனிடையே குவாட் உறுப்பு நாடுகளின் தலைவர்களை வரவேற்க அதிபர் ஜோ பைடன் ஆர்வமாக உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்தோ பசிபிக் பிராந்திய நாடுகளின் செயல்பாடு, கொரோனா கட்டுப்பாடு, பருவநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து, குவாட் உச்சி மாநாட்டில் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.