
அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் பெய்து வரும் கன மழை காரணமாக, மியாமி நகரின் கடலோரப் பகுதிகள் மூடப்பட்டுள்ளன.
மியாமியில் பெய்து வரும் கனமழையால், சாலையோரம் உள்ள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீருடன் கலந்த மழை நீர், சாலையில் வழிந்தோடுகிறது. இது போன்ற பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாத வகையில், கழிவுநீர் உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, புளோரிடோ மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை, தெற்கு கடற்கரை மற்றும் வர்ஜீனியா கீ கடற்கரை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில், குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.