மாலத்தீவில் தஞ்சம் அடைகிறார் ராஜபக்சே ? பாதுகாப்பாக அனுமதிப்பதற்கு அதிபர் நஷீத் வலியுறுத்தல்!

மாலத்தீவில் தஞ்சம் அடைகிறார் ராஜபக்சே ? பாதுகாப்பாக அனுமதிப்பதற்கு அதிபர் நஷீத் வலியுறுத்தல்!
Published on
Updated on
1 min read

மாலத்தீவு நாடாளுமன்றத்தின் சபாநாயகர், ஜனாதிபதி மொஹமட் நஷீத், இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்க முன்வந்ததாக மாலைத்தீவின் The Maldives Journal  என்ற சஞ்சிகை தெரிவித்துள்ளது.

நஷீத் தற்போது இலங்கையில் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் உயர்மட்ட அரசியல் பிரமுகர்களுடன் பல சந்திப்புகளை நடத்தி, ராஜபக்ச குடும்பத்தை மாலத்தீவுக்கு பாதுகாப்பான வழியில் அனுமதிப்பதற்காக அவர்களை நஷீத் வலியுறுத்தினார் என்றும் மாலத்தீவு பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மாலத்தீவு சஞ்சிகையில் வெளியாகியுள்ள இந்த தகவல்கள் குறித்து  மகிந்த ராஜபக்சவின் தரப்பு இதுவரை எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com