புதிய அரசு அமைப்பது குறித்து ரணில் விக்ரம சிங்கே அமைச்சர்களுடன் ஆலோசனை..!

புதிய அரசு அமைப்பது குறித்து ரணில் விக்ரம சிங்கே அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புதிய அரசு அமைப்பது குறித்து ரணில் விக்ரம சிங்கே அமைச்சர்களுடன் ஆலோசனை..!

பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள ரணில் விக்ரம சிங்கேவை கோத்தபய ராஜபக்சே இடைக்கால அதிபராக நியமிக்கும் படி கடிதம் அனுப்பி இருப்பதாக கூறப்படுகின்றது. அதன் படி, ரணில் விக்ரம சிங்கே இலங்கையின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்று உள்ளார்.

பிரதமர் பதவிக்கு எதிர்கட்சியினரின் ஒப்புதல் பெற்ற நபரை நியமிக்கும்படி சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்துள்ளார் ரணில். 

இதனிடையே ரணில் விக்ரம சிங்கே அலுவலகத்தில் புகுந்த போராட்டக்காரர்கள் அங்குள்ள உடைமைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  

ராணுவத்தினர் போராட்டக்காரர்களை விரட்டி பிரதமர் மாளிகையை கைப்பற்றிய சிறிது நேரத்தில் மீண்டும்  பிரதமர் அலுவலகத்திற்குள் மக்கள் பெருமளவில் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் அமைதி கேள்விக்குறியாகி உள்ளதால் இடைக்கால அதிபரான ரணில் விக்ரம சிங்கே, நாட்டின் நிலைமை குறித்தும், அதிபர் தேர்தல் குறித்தும் இன்று அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் இருந்து தப்பி மாலத்தீவில் தஞ்சம் அடைந்து இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.