5ஜி சேவையை பிற நாடுகளுக்கு வழங்க இந்தியா ரெடி!

5ஜி சேவையை பிற நாடுகளுக்கு வழங்க இந்தியா ரெடி!

முற்றிலும் உள்நாட்டு தயாரிப்பிலான 5ஜி சேவையை பிற நாடுகளுக்கும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

மத்திய நிதியமைச்சர் பேச்சு:

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன், நேற்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் பொருளாதாரம் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது டிஜிட்டல் துறை வளர்ச்சியின் மூலம் பணப்பரிமாற்றம், கல்வி, சுகாதாரத்தில் இந்தியா சிறந்து விளங்குவதாகவும், இதன் மூலம் கொரோனா பேரிடர் காலத்தில் தேவைப்படுவோருக்கு நிவாரண உதவிகளை வழங்க முடிந்ததாகவும் குறிப்பிட்டார்.  இது இந்தியாவின் வளர்ச்சி நிலையானதாக இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளதாகவும்  கூறினார்.

5ஜி தொழில்நுட்பம்:

தொடர்ந்து பேசிய அவர், முற்றிலும் உள்நாட்டில் உருவான  5ஜி தொழில்நுட்பம் மூலம் இந்தியாவின் சாதனைப் பற்றி பெருமிதம் கொள்ளலாம் என்று கூறினார். அத்துடன், இந்த 5ஜி தொழில் நுட்பத்தை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்றும், வரும் 2024 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பெரும்பாலான மக்கள் 5ஜி சேவையை பெறமுடியும் என்றும் அந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ‘ஹிஜாப்’ வழக்கும்... கடந்து வந்த பாதையும்...

முன்னதாக, இந்தியாவில் 5ஜி சேவையை முதல்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு , ஐதராபாத், சிலிகுரி மற்றும் வாராணாசி ஆகிய முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.