மீட்பு நடவடிக்கை.. உக்ரைனில் பேருந்துகளில் இருந்து இறக்கி விடப்பட்ட இந்திய மாணவர்கள்!! ஏன்?

மீட்பு நடவடிக்கை.. உக்ரைனில் பேருந்துகளில் இருந்து இறக்கி விடப்பட்ட இந்திய மாணவர்கள்!! ஏன்?

உக்ரைனில் மீட்பு நடவடிக்கையாக பேருந்துகளில் ஏற்றப்பட்ட இந்திய மாணவர்கள் மீண்டும் கீழே இறக்கி விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

உக்ரைனில் கீவ், கார்கீவ், சுமி உள்ளிட்ட 4 நகரங்களில் சிக்கியுள்ள இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரை மீட்பதற்காக,  தாக்குதல் இடை நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷ்யா அறிவித்தது. இதையடுத்து சுமி நகரில் இருந்து இந்திய மாணவர்களை மீட்கும் பணி தொடங்கியது. இந்தநிலையில், பேருந்துகளில் ஏற்றப்பட்ட மாணவர்கள் மீண்டும் கீழே இறக்கி விடப்பட்டுள்ளனர்.

இது குறித்து கூறிய மாணவர்கள், முதலில் பெண் மாணவிகளை மட்டும் பேருந்தில் ஏற்றியதாகவும், பின்னர் அவர்களையும் கீழே இறங்கச் சொல்லி விட்டதாகத் தெரிவித்தனர். தாக்குதல் நிறுத்த நேரம் முடிந்து குண்டு வீச்சு தொடங்கி விட்டதாகவும், மீண்டும் பதுங்குமிடங்களுக்கு செல்லுமாறு இந்திய அதிகாரிகள் அறிவுறுத்தியதாகவும் கூறியுள்ளனர். இந்திய அரசின் தொடர் தாமதத்தால் எப்போது தாயகம் திரும்புவோம் என்று தெரியாமல் பதுங்கு குழிக்குள் தவித்து வருவதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com