திரும்ப பெறப்பட்டதா ப்ளூடிக்....யு-டர்ன் அடித்த எலான் மஸ்க்!!!

திரும்ப பெறப்பட்டதா ப்ளூடிக்....யு-டர்ன் அடித்த எலான் மஸ்க்!!!
Published on
Updated on
1 min read

ட்விட்டர் புளூ டிக் சரிபார்ப்பு சேவை iOS பயனர்களுக்கு மட்டும் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

நிறுத்தப்பட்டதா ப்ளுடிக் சேவை கட்டணம்:

அமெரிக்காவில், ப்ளூ டிக் சரிபார்ப்புக்கான கட்டண சேவையை ட்விட்டர் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.  நவம்பர் 8 ஆம் தேதி அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கான இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு ப்ளூ டிக் சரிபார்ப்பு சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின்படி, தேர்தல் காரணமாக நிறுவனம் இந்த சேவையை இன்னும் தொடங்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

பணியாளர்கள் நீக்கத்தில் யு-டர்ன்:

தற்போது பணிநீக்கம் செய்யப்பட்ட சில ஊழியர்களை பணிக்கு திரும்புமாறு ட்விட்டர் கேட்டுக் கொண்டுள்ளது. ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிய உடனே அதன் பல பணியாளர்களை பணியிலிருந்து விலக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இப்போது சில பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் வேலைக்கு வரச் சொன்னதாக செய்தி வெளியாகியுள்ளது.  இருப்பினும் எந்த ஊழியர்கள் வேலைக்கு அழைக்கப்பட்டனர், அவர்களின் பெயர் மற்றும் பதவிகள் வெளியிடப்படவில்லை.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com