டெல்டா வகை கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்வு

ஆஸ்திரேலியாவில் டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது.

டெல்டா வகை கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்வு

ஆஸ்திரேலியாவில் டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. இதனிடையே பிரிட்டன், இந்தியா போன்ற நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறிப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு டெல்டா வேரியண்ட் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் வேகமாக பரவும் திறன் கொண்டது எனவும், இது அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றன.

இதனால், பல நாடுகள் இந்தியாவில் இருந்து பயணிகள் வர கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. மேலும், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் டெல்டா வேரியண்ட் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் டெல்டா வேரியண்ட் கொரோனா 
வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.