ராணுவ வீரர்களின் உயிரிழப்பை முதன்முறையாக ஒப்புக் கொண்ட ரஷ்யா!!

உக்ரைன் போரில் தங்கள் தரப்பு இழப்பை ரஷ்யா முதன்முறையாக ஒப்புக் கொண்டதையடுத்து, அந்நாட்டு ராணுவ வீரர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. 

ராணுவ வீரர்களின் உயிரிழப்பை முதன்முறையாக ஒப்புக் கொண்ட ரஷ்யா!!

40 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் போரில் உக்ரைன் அழிவுகள் மட்டுமே இதுவரை உலகின் கவனத்திற்கு வந்தது. ரஷ்ய ராணுவ வீரர்கள் 15 ஆயிரம் பேரை கொன்று குவித்து விட்டதாக உக்ரைன் சொன்னதை யாரும் நம்பவில்லை.  ஆனால் ஓரளவுக்காவது  இழப்பு இருக்கும் என்று கணிக்கப்பட்டாலும்  ரஷ்யா அது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் அளிக்க மறுத்து வந்தது.

இந்தநிலையில், அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் இறந்ததை முதன்முறையாக ஒப்புக் கொண்ட அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்,  ரஷ்யாவின் மிகப் பெரிய சோகம் என்று அதனை குறிப்பிட்டுள்ளார். ஆனால் எண்ணிக்கையை அவர் வெளிப்படையாக கூறவில்லை.

இந்தநிலையில், ரஷ்ய ராணுவ வீரர்கள் நல்லடக்கம் செய்யப்படும் காட்சிகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன . விளாடிகாவ்காஸ் நகரில் உள்ள வோஸ்டோக்னோ கல்லறையில் ராணுவ மரியாதையுடன் இரு வீரர்களின் உடல் அடக்கம் நடைபெற்றது. இங்கு மட்டும்  20-க்கும் மேற்பட்ட வீரர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.