கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்த ரஷ்யா! உலக நாடுகளுக்கு சவால் விட்ட புதின்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. 

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்த ரஷ்யா! உலக நாடுகளுக்கு சவால் விட்ட புதின்!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் 2-வது மாதத்தை நெருங்கி வரும் நிலையில் ரஷ்யா புதியதாக  கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இது அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டதாகும்.

இதுகுறித்து பேசிய அதிபர் புதின்,  உண்மையான தனித்துவமான ஆயுதம் என்றும், இது ரஷிய ஆயுதப் படைகளின் போர் திறனை வலுப்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  ரஷியாவின் பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் புதிய ஏவுகணை உறுதி செய்துள்ளது என்றும், ரஷியாவை தாக்க நினைக்கும் எதிரிகள் இது குறித்து சிந்திக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். உலகத்தின் எந்த மூலையையும் தன்னால் தாக்க முடியும் என்றார். இது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளுக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே, மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் ராணுவத்தினர் சரண் அடைய ரஷ்யா விடுத்திருந்த கெடு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் அங்குள்ள உருக்காலையை சுற்றி ரஷிய படைகள் முற்றுகையிட்டுள்ளன.