உக்ரைனில் அதிதீவிர தாக்குதலை நிகழ்த்தி வரும் ரஷ்ய.. போரில் ரூ.45 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துகள் அழிப்பு

உக்ரைன் போரில் 45 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் அதிதீவிர தாக்குதலை நிகழ்த்தி வரும் ரஷ்ய.. போரில் ரூ.45 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துகள் அழிப்பு

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் அதிதீவிர தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. ரஷிய படைகள் உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் உள்ள நகரங்களைச் சுற்றி வளைக்க முயற்சித்து வருவதாகவும் பல கிராமங்களை அவர்கள் கைப்பற்றியுள்ளனர் என்றும் இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உக்ரைனுக்கு ராணுவ ரீதியாக தொடர்ந்து ஆதரவளிப்பது அவசியம் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
இதனிடையே, உக்ரைன் போரில் ரஷியா அழித்துள்ள சொத்துகளின் மதிப்பு சுமார் 45 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று கீவ் பொருளாதார கல்லூரி கணித்துள்ளது. துறைமுக நகரமான மரியுபோலில் ரஷிய படைகளின் தாக்குதலில் தரைமட்டமான தொழிற்சாலை ஒன்றின் இடிபாடுகளில் இருந்து 70 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.