ஒலிம்பிக்கில் வெளியேற்றப்படும் ரஷ்யா....காரணம் என்ன?!!!

ஒலிம்பிக்கில் வெளியேற்றப்படும் ரஷ்யா....காரணம் என்ன?!!!

பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில்,  ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இடம் பெறக்கூடாது என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். 

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 11 மாதங்களாக நீடித்து வருகிறது.  இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். இந்த தொலைபேசி உரையாடலுக்கு பின்னர் ஜெலன்ஸ்கி டெலிகிரமில் ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார். 

அதில், அடுத்த ஆண்டு பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில்,  ரஷியாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இடம் பெறக்கூடாது என  பிரான்ஸ் அதிபரிடம் வலியுறுத்தியுள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு....