ரஷ்ய தேசிய பாதுகாப்புப் படை நாள்- வீரர்களை காணொலியில் வாழ்த்திய புதின்!!

தேசிய பாதுகாப்புப் படை நாளையொட்டி உக்ரைனில் சிறப்பு ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு அதிபர் புதின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தேசிய பாதுகாப்புப் படை நாள்- வீரர்களை காணொலியில் வாழ்த்திய புதின்!!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ உரையில்,  டான்பாஸ் மற்றும் உக்ரைனில் சிறப்பு ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தேசிய காவல் படையிடம் உரையாற்றுவதை சிறப்பாக கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்.

போர் நிலைமைகள் அதிக ஆபத்தை உள்ளடக்கியது என்றும் இந்த சூழ்நிலையில்  எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்பதை நன்கு அறிவதாகவும் கூறியுள்ளார்.  சிக்கலான பணிகளை திறமையாக, துல்லியமாக, வீரத்துடன் செயல்படுத்தி வருவதாகவும் பாராட்டியுள்ளார். மொத்த நாடும் பெருமை கொள்வதாகவும், வீரர்களின் கடமை மற்றும் விசுவாசத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் புதின் கூறியுள்ளார். ரஷ்யாவில் தேசிய பாதுகாப்புப் படை என்பது அதிபருடன் நேரடித் தொடர்பில் உள்ள ராணுவப்பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.