வான்வழி மூடப்பட்டதால் ரஷ்ய அமைச்சரின் செர்பிய பயணம் ரத்து!!

வான்வழி மூடப்பட்டதால் ரஷ்ய அமைச்சரின் செர்பிய பயணம் ரத்து!!

அண்டை நாடுகள் வான்வழியை மூடியதால் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் செர்பிய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உக்ரைனுடனான போர் தொடங்கிய பின்னர் ஐரோப்பாவில் எஞ்சியுள்ள ஒரு சில ரஷ்ய ஆதரவு நாடுகளில் செர்பியாவும் ஒன்று. இதையடுத்து அங்கு சென்று உக்ரைன் தொடர்பாக ஆலோசிக்க செர்ஜி லாவ்ரோவ் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், அவர் தங்கள் வான்வழியாகப் பயணம் செய்ய அனுமதிக்க முடியாது என பல்கேரியா, மாசிடோனியா மற்றும் மாண்டினீக்ரோ நாடுகள் மறுத்து விட்டன. ஐரோப்பிய ஒன்றியமும் நேட்டோ உறுப்பு நாடுகளின் அழுத்தமே இதற்கு காரணம் என்று ரஷ்யா கூறியுள்ளது.

உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு செர்பியா கண்டனம் தெரிவித்தாலும் பொருளாதாரத் தடை விதிப்பில் உடன்படவில்லை என்பதும் அண்மையில் ரஷ்யாவிடம் இருந்து இயற்கை எரிவாயு பெறும் புதிய 3 ஆண்டு ஒப்பந்தத்தில் செர்பியா கையெழுத்திட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.