புதுப்பிக்கப்படுமா சாகர் உணவு ஒப்பந்தம்?!! ஐநா கூறுவதென்ன?!!

புதுப்பிக்கப்படுமா சாகர் உணவு ஒப்பந்தம்?!! ஐநா கூறுவதென்ன?!!

சாகர் ஒப்பந்தம் கருங்கடலில் உள்ள சில உக்ரேனிய துறைமுகங்களில் இருந்து தானிய ஏற்றுமதியை அனுமதிக்கிறது.  சர்வதேச விலைகளை குறைக்க உதவும் வகையில் சுமார் 10 மில்லியன் டன் தானியங்களை வழங்கும் நோக்கத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
 

ஐ.நா-வின் அனுமதியுடனான கருங்கடல் வழி உணவு மற்றும் உரத் தொகுப்பு தொடர்பான சாகர் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் என்பதை ஐக்கிய நாடுகள் சபை  உறுதி செய்துள்ளது. இதற்கு முன்னதாக,  கருங்கடல் உணவு மற்றும் உரத் தொகுப்பு தொடர்பான சாகர் ஒப்பந்தம் வரும் நாட்களில் புதுப்பிக்கப்படும் என்று இந்தியா நம்பிக்கை தெரிவித்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவுடனான மோதல்களுக்கு மத்தியில் உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதியையும் இந்த ஒப்பந்தம் அனுமதிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதியுடன் இந்த ஒப்பந்தம் ஜூலை 22 அன்று போடப்பட்டது.   மேலும் இது நவம்பர் 19ஆம் தேதி அன்று நிறைவடைகிறது. 

இந்த ஒப்பந்தம் கருங்கடலில் உள்ள சில உக்ரேனிய துறைமுகங்களில் இருந்து தானிய ஏற்றுமதியை அனுமதிக்கிறது, சர்வதேச விலைகளை குறைக்க உதவும் வகையில் சுமார் 10 மில்லியன் டன் தானியங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியான தூதர் ருசிரா காம்போஜ், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் உக்ரைன் தொடர்பான விளக்கமளிக்கும் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   ஏக்நாத் ஷிண்டேவிற்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்....பதிலளிப்பாரா ஷிண்டே?!!