90 நிமிடங்களில் பூமியை சுற்றி வரும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்: விண்வெளிக்கு 3நாள் சுற்றுலா செல்லும் மற்றோரு பணக்காரர் ...

அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ராக்கெட் மூலம் 4 பேரை விண்வெளிக்கு சுற்றுலாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கான கவுண்டன் நாளை மறுநாள் தொடங்குகிறது.

90 நிமிடங்களில் பூமியை சுற்றி வரும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்: விண்வெளிக்கு 3நாள் சுற்றுலா செல்லும் மற்றோரு பணக்காரர் ...

விண்வெளி சுற்றுலாத் தொழில் உலகளவில் பிரபலமடைய தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் ராக்கெட் மூலம் ஷிப்ட் 4 பேமன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜாரிட் ஐசக் மேன் என்ற கோடீஸ்வரனின் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் இந்த வாரம் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்த பயணத்திற்கான கவுண்டவுன் வருகின்ற புதன்கிழமை தொடங்கவுள்ள நிலையில், இன்ஸ்பிரேஷன் - 4 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கலம் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் என்.9 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் பாய தயாராகி வருகிறது.

மணிக்கு 27,300 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் இந்த விண்கலம், 90 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியை முழுவதுமாக சுற்றிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் விண்வெளி பயணத்திற்கு பிறகு அட்லாண்டிக் கடலில் பயணம் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விண்வெளிக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட முதல் பொதுமக்கள் என்ற சிறப்பை இந்த 4 பேரும் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.