வாட்ஸ்அப்பில் இருந்து விலகி இருக்குமாறு எச்சரிக்கை விடுத்த டெலிகிராம் நிறுவனர்...!!!காரணம் என்ன??!!

வாட்ஸ்அப்பில் இருந்து விலகி இருக்குமாறு எச்சரிக்கை விடுத்த டெலிகிராம் நிறுவனர்...!!!காரணம் என்ன??!!

டெலிகிராம் நிறுவனரான பாவெல் துரோவ் வாட்ஸ்அப்பில் இருந்து விலகி இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாவெல் அறிவுரை:

உடனடி செய்தியிடல் செயலியான டெலிகிராம் நிறுவனர்  பாவெல் துரோவ் வாட்ஸ்அப் மெசேஜிங் செயலியிலிருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.  இதற்கான காரணத்தையும் அவரே கூறியுள்ளார்.

விலகி இருங்கள்..:

வாட்ஸப் செயலின் மூலம் எளிதாக ஹேக் செய்து பயனர்களின் தரவுகளை எளிதாக அணுக முடியும் எனத் தெரிவித்துள்ளார்.  ”டெலிகிராமை மட்டும் பயன்படுத்துங்கள் என அறிவுறுத்தவில்லை வாட்ஸப்பில் இருந்து விலகி இருங்கள் என்றுதான் கூறுகிறேன்” எனப் பேசியுள்ளார் பாவெல்.

எச்சரிக்கை:

கடந்த காலங்களிலேயே வாட்ஸ்அப் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என பாவெல் பலமுறை அறிவுறுத்தியுள்ளார்.  வாட்ஸப் மீது பலமுறை விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.  வாட்ஸ்அப் செயலியில் அடிப்படை மாற்றங்களை செய்யாவிட்டால் பாதுகாப்பாக இருக்காது என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் பாவெல்.

காரணம் என்ன?:

வாட்ஸ்அப்பில் பெரிய சிக்கல் கண்டறியப்பட்டுள்ளது.  வாட்ஸ்அப்பின் வீடியோ அழைப்பின் மூலம் ஹேக்கர்கள் எளிதாக ஸ்மார்ட்போனை கட்டுப்படுத்த முடியும் என கூறியுள்ளார் பாவெல்.  இந்திய அரசாங்கமும் இது தொடர்பாக ஹேக்கர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டெலிகிராம் உலகளவில் 700 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்டுள்ளது.  மேலும் தினசரி இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் அதிகரித்து வருகின்றனர். 

இதையும் படிக்க:   விமர்சனங்களுக்கு பதிலளித்த பும்ரா!!!