குளோபல் வில்லேஜ் கண்காட்சி... 26 நாடுகள் பங்கேற்பு... 

26 நாடுகள் பங்கேற்ற குளோபல் வில்லேஜ் கண்காட்சி தொடங்கியது

குளோபல் வில்லேஜ் கண்காட்சி... 26 நாடுகள் பங்கேற்பு... 

26 நாடுகள் பங்கேற்ற குளோபல் வில்லேஜ் கண்காட்சி தொடங்கியது.

இந்தியா, ஈராக் உள்ளிட்ட 26 நாடுகள் பங்கேற்ற குளோபல் வில்லேஜ் கண்காட்சி துபாயில் தொடங்கியது. துபாய் நகரின் முக்கிய பொழுதுபோக்கு கண்காட்சிகளில் ஒன்றாக குளோபல் வில்லேஜ் கண்காட்சி திகழ்ந்து வருகிறது. இந்த கண்காட்சி நேற்றைய தினம் தொடங்கியது.

இதில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, ஓமன், சவுதி அரேபியா, ஏமன் உள்ளிட்ட 26 நாடுகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு ஈராக் புதிதாக அரங்கினை அமைத்துள்ளது. இதுமட்டுமல்லாமல் 80 நாடுகளின் கலை, கலாசாரம் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கண்காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.