தொடங்கியது புனித ஹஜ் யாத்திரை

சவுதி அரேபியாவில் உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமான புனித ஹஜ் யாத்திரை தொடங்கியுள்ளது.

தொடங்கியது புனித ஹஜ் யாத்திரை

ஹஜ் யாத்திரையில் பங்கேற்க வெளிநாட்டுப் பயணிகளுக்கு இரண்டாவது ஆண்டாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, ஐந்து நாள்களுக்கு நீடித்த யாத்திரையில் எந்தக் கிருமித்தொற்றுச் சம்பவமும் பதிவாகவில்லை. இந்த ஆண்டும், அதேபோன்ற பாதுகாப்பான யாத்திரைக்கு ஏற்பாடு செய்ய, சவுதி அரேபியா விரும்புகிறது.

18 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்ட எந்தவொரு நாள்பட்ட நோயும் இல்லாத சவுதி அரேபியக் குடியிருப்பாளர்கள் 60 ஆயிரம் பேர், இம்முறை ஹஜ் யாத்திரையை மேற் கொள்ள உள்ளனர்.  கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்டவர்களைக் காட்டிலும் அந்த எண்ணிக்கை அதிகமாகும். பாதுகாப்பு இடைவெளி நடைமுறைகள் மட்டுமின்றி, “Smart Haj card” எனும் புதிய அட்டையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவலுக்கு முன்பு, உலகெங்கிலுமுள்ள 2 மில்லியனுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், மக்காவிலும் மதினாவிலும் புனித யாத்திரை மேற் கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.