துப்பாக்கியால் சுட்டு அச்சுறுத்திய இலங்கை கடற்படை... உயிர்பயத்தத்துடன் கரை திரும்பிய தமிழ்நாட்டு மீனவர்கள்!!

வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்ததால் ராமேஸ்வரம் மீனவர்கள் உயிர் பயத்துடன் கரை திரும்பினர்.

கடந்த 13-ந் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து சென்ற மீனனவர்கள் 17 பேரை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை கைது செய்ததுடன், அவர்களின் 3 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தது. இதனை கண்டித்து, கடந்த 15-ந் தேதி முதல் 17ஆம் தேதி வரை மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர், அனுமதி சீட்டு கிடைத்தை தொடர்ந்து ராமேஸ்வரத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். 

இந்நிலையில், தனுஷ்கோடி -  தலைமன்னார் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர். 

இதனால், 3 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள், உயிர் பிழைத்தால் போதும் என வெறுங்கையுடன் கரை திரும்பி உள்ளனர். இலங்கை கடற்படையின் தொடரும் அட்டூழியத்தால் மீனவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

இதையும் படிக்க || 'எனக்கும் பூ வைத்து விடு'... கோமதி யானையின் குறும்பு!!