குரான் மற்றும் ஈராக் கொடி எரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ,.. சுவீடன் தூதரகம் தாக்கப்பட்டு தீ வைத்து முற்றுகை....!

குரான் மற்றும் ஈராக் கொடி எரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ,..  சுவீடன் தூதரகம் தாக்கப்பட்டு தீ வைத்து முற்றுகை....!
Published on
Updated on
2 min read

ஆப்கானிஸ்தான் பாக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகத்தை 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு தீ வைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

சுவீடனில் இஸ்லாமியர்களின் புனித நூல் குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு எதிராக இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு  ஸ்டாக்ஹோமில் உள்ள ஈராக்கின் தூதரகத்தின் அருகில்  ஒரு மசூதிக்கு வெளியே ஒரு நபர் குரானை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். 

இரண்டு வாரங்களுக்கு முன்  ஈராக்கில்  அகதியாக இருக்கும்  சல்வான் மோமிகா என்பவர், , இஸ்லாமியர்களின் விடுமுறையான ஈத் அல்-ஆதாவின் முதல் நாளில் மத்திய மசூதிக்கு வெளியே இஸ்லாமிய புனித நூலான  ’திருகுர்ஆன்’ -ஐ  கிழித்து எரித்தார். ஸ்வீடனில் நடந்த சமீபத்திய ஆர்ப்பாட்டத்தில்,  மோமிகாவும் மற்றொரு எதிர்ப்பாளரும் சேர்ந்து,  திருக குர்-ஆனின் நகல்களை உதைத்து ஈராக் கொடியின் பிரதியை மிதித்தார்கள்.

இதற்கு பதிலடியாக, ஈராக் பிரதம மந்திரி முகமது ஷியா அல்-சூடானி, ஸ்வீடன் தூதரை வெளியேற்றினார் மற்றும் ஸ்வீடனில் உள்ள ஈராக் தூதரகத்தில் இருந்து வெளியேறுமாறு ஈராக்கின் பொறுப்பாளர்களுக்கு உத்தரவிட்டார் .

இதன் விளைவாக  ஈராக் அரசு,  ஸ்வீடன் நாடுடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டித்தது.  "நோபல் குர்ஆனை எரிக்கவும், இஸ்லாமிய புனிதங்களை அவமதிக்கவும், ஈராக் கொடியை எரிக்கவும் ஸ்வீடன் அரசாங்கம் மீண்டும் மீண்டும் அனுமதித்ததன் பிரதிபலிப்பாகும்" என்று திரு. அல்-சூடானி ஒரு ட்வீட்டில் கூறினார். 

ஈராக் அரசாங்கம் ஸ்வீடிஷ் தொலைத்தொடர்பு நிறுவனமான எரிக்சன் நிருவனம் தனது   நாட்டில் இயங்கும் உரிமத்தையும் ரத்து செய்தது.

இந்த செயல்,  பாகிஸ்தான் மற்றும் ஈராக்கில் உள்ள இஸ்லாமியர்கள் மத்தியில் கடுங்கோபத்தைத் தூண்டியது. மேலும், இராக் கொடி எரிப்பு சம்பவத்திற்கு   சுவீடன் நாட்டு காவல்துறையினர் ஒப்புதல் அளித்திந்தனர் என ஸ்வீடன் நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்ததையடுத்து,  ஈராக்கில் உள்ள இஸ்லாமியர்கள் ஸ்வீடன் நாட்டு தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

குரான் மற்றும் ஈராக் கோடி எரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆத்திரமடைந்த எதிர்ப்பாளர்கள் பெரும் திரளாக கருப்பு உடைகள் அணிந்து ஸ்வீடன் தூதரகத்தின் தளங்களுக்குள்  உட்புகுந்தனர்.

தொடர்ந்து, இந்த குரான் அவமதிப்பு செயலுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கருப்பு கோடியை அசைத்தும், கண்டன கோஷங்கள் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் சிலர், கடுங்கோபத்தின் வெளிப்ப்பாடாக ஸ்வீடிஷ் தூதரகத்தின் சில பகுதிகளில் தீ வைத்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். தூதரகத்தின் சில பகுதிகளிலிருந்து தீ பிழம்புகள் வெளியேரும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவத்தின் எதிரொலியாக ஸ்வீடன் தூதரகத்தின் பகுதிகளில் பெரும் அமைதியற்ற சூழல் நிலவியுள்ளது.

மேலும், புனித  நூலான திருக்குர்ஆன் அவமதிப்பு நிகழ்வை எதிர்த்து   இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு ஐ.நா. சபையில் கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. இதை இந்தியா ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை இந்தியா ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com