பொதுமக்களை கொடூரமாக கொலை செய்யும் தலிபான்கள்: பிபிசி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ...

ஆப்கானிஸ்தான் அதிகாரத்தை கைப்பற்றுவதில் தலிபான் தலைவர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் இதில் தலிபான் முக்கிய தலைவர் சுட்டு கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

பொதுமக்களை கொடூரமாக கொலை செய்யும் தலிபான்கள்: பிபிசி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ...

அமைச்சரவையில் பொறுப்பு வகிக்கும் தலிபான் தலைவர்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளதை அடுத்து, அதிபர் மாளிகையில் குழப்பமான சூழல் நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து தலிபான்கள் அதிரடியாக நாட்டை கைப்பற்றினர்.

 அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார். இதையடுத்து, தலிபான்கள் தலைமையில் இடைக்கால அரசு அறிவிக்கப்பட்டது. இதில், தலிபான்கள் அரசியல் பிரிவு தலைவரும், அமெரிக்க படைகளுடனான பேச்சில் முக்கிய பங்கு வகித்த முல்லா அப்துல் கனி பராதருக்கு துணைப் பிரதமர் பதவி வழங்கப்பட்டது.பாகிஸ்தானுக்கு மிகவும் நெருக்கமான ஹக்கானி அமைப்பின் மூத்த தலைவர் கலில் உர் ரஹ்மானுக்கு உள்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில், புதிய அரசு குறித்து, ஹக்கானி குழுவினருக்கும், தலிபான்களுக்கும் இடையே காபூலில் உள்ள அதிபர் மாளிகையில் சமீபத்தில் பேச்சு நடந்தது. அப்போது, தாங்கள் அதிரடியாக போர் புரிந்ததால் தான் ஆப்கனில் ஆட்சி கைக்கு வந்தது என, ஹக்கானி குழுவினர் தெரிவித்தாக கூறப்படுகிறது.இதை முல்லா பராதர் கடுமையாக மறுத்ததாக தெரிகிறது.'அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு சுமுகமாக முடிந்ததை அடுத்தே, ஆப்கன் போர் முடிவுக்கு வந்தது என முல்லா பராதர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ஹக்கானி குழுவினருக்கும், முல்லா பராதர் ஆதரவாளர்களுக்கு பயங்கர சண்டை மூண்டதாகவும், இந்த சண்டையில் முல்லா பராதர் கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.இதை தலிபான்கள் முற்றிலுமாக மறுத்துள்ளனர் தான் கொலை செய்யப்பட்டதாக உலவும் செய்தி தவறானது' என, முல்லா பராதரின் குரலில், ஆடியோ வெளியாகி உள்ளது.

இந்நிலையில், அதிபர் மாளிகையில் சண்டை எதுவும் நடைபெறவில்லை. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என, முல்லா பராதர் நேரில் தோன்றி அறிவித்தால் மட்டுமே இந்த குழப்பம் முடிவுக்கு வரும்' என, பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.இந்த நிலையில் தலிபானுக்கு எதிராக செயல்பட்ட பொதுமக்கள் 20 பேரை தலிபான்கள் கொடூரமாக சுட்டு கொல்லப்பட்டு இருப்பதாகவும் அவர்களை காரில் அழைத்து சென்று இந்த செயலில் ஈடுபட்டு இருப்பதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.