துணிக்கடை பொம்மைகளின் தலையை வெட்டி எறிய தலிபான்கள் திடீர் உத்தரவு...

ஆப்கானிஸ்தானில் உள்ள துணிக்கடைகளில் இருக்கும் பொம்மைகளின் தலையை வெட்டி எறி தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
துணிக்கடை  பொம்மைகளின் தலையை வெட்டி எறிய தலிபான்கள் திடீர் உத்தரவு...
Published on
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து கடந்த ஆண்டும் ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சி அமைத்து  தங்களின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் அங்கு பல கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.  சலூன் கடைகளில் தாடியை எடுக்ககூடாது பெண்களுக்கு கடும் நிபந்தனைகளை விதித்தனர். அவர்கள் பள்ளிக்கு செல்லக்கூடாது.  ஆண் உறவினர் துணை இன்றி வெளியே செல்லக்கூடாது என்பது போன்ற உத்தரவுகளை பிறப்பித்தனர்.

இந்த நிலையில் தலிபான்கள் அடுத்து ஒரு புதிய உத்தரவை பிறப்பித்து இருக்கிறார்கள்.துணிக்கடைகளில் உள்ள அலங்கார பொம்மைகளின் தலையை வெட்டி எறிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. தலிபான்கள் உத்தரவை அடுத்து பொம்மைகளின் தலைகளை துணிக்கடைக்காரர்கள் துண்டித்து வருகிறார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com